இலங்கையில் பணவீக்கம் 7.2 சதவீதமாக அதிகரிப்பு




இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், உணவுப் பிரிவின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் பதிவான 3.3 சதவீதத்திலிருந்து ஜூலை மாதத்தில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எனினும், உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் பதிவான 9.3 சதவீதத்திலிருந்து ஜூலை மாதத்தில் 9.2 சதவீதமாக சிறிதளவு குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.