கொழும்பில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்படும் என நுகர்வோரும் இறக்குமதியாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். எனினும், இவ்வரி மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது நடப்பு ஆண்டின் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை ஏமாற்றமளிக்கிறது. இந்த வரி உயர்வின் காரணமாகச் சந்தையில் மிகவும் பிரபலமான வாகனங்களின் விலைகள் பல லட்சங்களால் அதிகரித்துள்ளன.
முன்பு 65 இலட்சம் முதல் 70 இலட்சம் ரூபாய் வரை நிலவிய வேகன் ஆர் ரக வாகனத்தின் விலை, தற்போதைய வரிக்க அதிகரிப்புக்குப் பின்னர் 75 இலட்சம் முதல் 85 இலட்சம் ரூபாய் வரையிலும், உயர் தர மாடல்கள் 90 இலட்சம் ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளன. அதேபோன்று, 135 இலட்சம் ரூபாயாக இருந்த அல்டோ மற்றும் அட்ரேஸ் ரக வாகனங்களின் விலைகள் தற்போது 145 இலட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளன. ஹோண்டா வெசல் ரக வாகனத்தின் விலை 180 முதல் 185 இலட்சம் ரூபாயிலிருந்து தற்போது 195 இலட்சம் ரூபாயாகவும், அதிநவீன மாடல்கள் 210 முதல் 215 இலட்சம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஐந்து வருடங்களாக வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தையில் காணப்பட்ட பெரும் தேவையின் காரணமாகவே தற்சமயம் வீதிகளில் அதிகளவில் புதிய வாகனங்கள் பயணிக்கின்றன. பொதுப் போக்குவரத்துச் சேவை இன்னும் போதுமான வளர்ச்சியடையாத சூழலிலும், காலநிலை மாற்றங்கள் காரணமாகவும் மக்கள் தமது குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியத் தேவ கருதியே வாகனங்களைச் சொந்தமாக வாங்க முற்படுகின்றனர்.
எனினும், கூடுதல் வரி காரணமாகப் புதிய வாகனங்களை பதிவு செய்யப்படாத நிலையில் கொள்முதல் செய்ய முடியாத நுகர்வோர், தற்போது பதிவு செய்யப்பட்ட பயன்படுத்திய வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் பயன்படுத்திய வாகனங்களின் தேவையும் அவற்றின் விலைகளும் சந்தையில் உயர்வடைந்துள்ளன.
இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில், சிறிய ரக வாகனங்களுக்காவது குறித்த கூடுதல் வரியில் விலக்கு அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், வாகனக் கடனுக்கான கடன் மதிப்பு விகிதத்தை 60 சதவீதமாக உயர்த்திக் கொடுத்தால், பொதுமக்கள் ஓரளவு கடன் வசதிகளைப் பெற்றுத் தமது வாகனத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வழியேற்படும்.
தற்போதைய வரி விதிப்புகள் மற்றும் விலை ஏற்றம் காரணமாக வாகன விற்பனைத் துறை கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. நுகர்வோர் தமது கைகளில் உள்ள குறைந்தபட்சப் பணத்தைக் கொண்டு மட்டுமே வாகனங்களைக் கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், அதிக இலாப நோக்கின்றி, தொழில் துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மட்டுமே தங்களது வியாபாரம் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தற்சமயம் கொண்டு செல்லப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.





.jpg)





.jpg)
