கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, ஒரு சீனப் பிரஜை கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
பின்னர் அவரது சடலம் எஹெலியகொட பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகக் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
அத்துடன், இக்குற்றத்துடன் தொடர்புடைய மூன்று சீனப் பிரஜைகளைக் கைது செய்யப் பொலிஸார் பொதுமக்களின் உதவியையும் கோரியிருந்தனர்.
இதற்கமைய, சிகிரியாவிலுள்ள உணவகம் ஒன்றில் மறைந்திருந்த போதே இவ்விரு சந்தேகநபர்களும் வெள்ளிக்கிழமை (28) கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)


