![]() |
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பள்ளவராயன்கட்டு, அக்கரயன்குளம், அரிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் அனந்தபுரம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான, முல்லைத்தீவு தொடக்கம் திருகோணமலை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான வரையான கடல் பிராந்தியத்தில் கடல் அலையானது சுமார் 2.0 - 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இக் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் இக் கடல் பிராந்தியத்தை அண்மித்து வாழுகின்ற பொதுமக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


.jpg)

.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)


