கல்கிஸ்சையில் துப்பாக்கிச்சூடு – படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு




கல்கிஸ்சை, ஹுளுதாகொட வீதியில் நேற்று சனிக்கிழமை (15) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் இத்துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.