.jpg)
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஆயத்தமாகும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட முயல்வது வரலாற்றில் இடம்பெறும் மிகப்பெரிய தவறாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு மகாநாயக்க தேரர்கள், சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,
தைரியமிருந்தால் இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்து சர்வசன வாக்கெடுப்புக்குச் சென்று மக்களின் ஆணையப் பெறுமாறு அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
குறிப்பிட்ட தனிநபர்களை இலக்கு வைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் ஏன் முற்படுகிறது? நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க அதிகாரம் ஆகிய இரண்டையும் தம்மிடம் வைத்துக்கொண்டு, தற்போது நீதித்துறைக்குள்ளும் தலையிட்டு தமக்கு வேண்டியவர்களை வேண்டிய இடங்களில் அமர்த்த அரசாங்கம் முயல்கிறது. நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்து எதிர்க்கட்சிகளை அடக்குமுறையின்கீழ் கொண்டுவருவதே இதன் பின்னணியிலுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள், இன்று ஜனநாயக சீர்குலைவுக்கு வழிவகுக்கின்றனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து அந்த நீதிபதிகளே தீர்மானம் வழங்குவதில் எந்தவித நியாயமும் இல்லை.
அனைத்து அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரம் என்பன மக்களுக்கே உரியது. 142 ஆக இருந்த அரசாங்கத்தின் மக்கள் ஆதரவு தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. தேர்தலைக் கண்டு அஞ்சும் அரசாங்கம், மக்கள் தீர்ப்புக்குச் செல்லத் தயங்குகிறது.
மக்களின் எச்சரிக்கையை மீறி அரசாங்கம் செயற்பட்டால், மக்கள் வரவிருக்கும் தேர்தலில் இதற்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4





.jpg)





.jpg)
