பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்காலத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருவதுடன், உரிமையாளர்களின் கவனக்குறைவே இதற்கு முக்கிய காரணம் ஆகும். மோட்டார் சைக்கிள்களின் எஞ்சின் இயக்கத்தில் இருக்கும் போதே அவற்றை விட்டுச் செல்வது, சாவியை திறப்பு துளையிலேயே கவனக்குறைவாக விட்டுவிடுவது மற்றும் தொலைபேசிகள், மடிக்கணினிகள், பணம் போன்ற மதிப்புமிக்க பொருட்களை இருக்கைகளுக்கு அடியில் கவனமாக விட்டுச் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்களால் இழைக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் வாகனங்களை நிறுத்தும் போது பாதுகாப்பற்ற மற்றும் தனிமையான இடங்களைத் தவிர்த்து, பகல் அல்லது இரவு நேரங்களிலும் கூட பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
மேலும், பாதுகாப்புப் பணியாளர்களை நேரில் சந்தித்து தகவல் தெரிவிப்பதுடன், சிசிடிவி வசதிகள் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
வாகனங்களில் ஒலி அமைப்புகள், ஜிபிஎஸ் (GPS) கருவிகளைப் பொருத்துவதும், வாகனங்களின் புகைப்படங்களைப் பாதுகாப்பாக நகல் எடுத்து வைத்திருப்பதும் திருட்டுக்களைத் தவிர்க்க உதவும். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்டால், உடனடியாக 24 மணிநேரமும் சேவையில் உள்ள பொலிஸ் துறையின் அவசர இலக்கங்களான 119 அல்லது 118 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும். பொதுமக்களின் விழிப்புணர்வும் பொறுப்பான நடத்தையுமே குற்றவாளிகளுக்கான வாய்ப்புகளை முற்றிலுமாக அகற்றும் என்றார்.







.jpg)



.jpg)
