கொழும்பு - குவைத் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்


கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்த விமான சேவைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது போர்ச் சூழல் ஓரளவுக்குத் தணிந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.