இது குறித்து திங்கட்கிழமை (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல் நினோ சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் நோக்கில், மின்கல ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, முதற்கட்டமாக 160 மெகாவோல்ட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் செயற்றிட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த கட்டமைப்பின் ஊடாக செப்டம்பர் மாதத்தில் 130 மெகாவோல்ட்டும், ஒக்டோபர் மாதத்தில் 10 மெகாவோல்ட்டும் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் துறையினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் திட்டத்துடன் தொடர்புடைய தற்போதைய பிரச்சினைகள் சுமூகமாகத் தீர்க்கப்பட்டால், மேலதிகமாக 50 மெகா வோல்ட் மின்சாரத்தை தேசிய மின் அமைப்புடன் இணைக்க இயலும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாட்டின் தற்போதைய எரிசக்தித் தேவைகளைக் கருத்திற்கொண்டு, எல் நினோ சவால்களைச் சமாளிக்கும் வகையில் மின்கல அமைப்புகள் மூலம் முறையே 250 மெகா வோல்ட் மற்றும் 150 மெகா வோல்ட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புடன் சேர்ப்பதன் மூலம் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என அமைச்சர் அனுர கருணாதிலக்க மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.


.jpg)


.jpg)





.jpg)
