கல்கிசை பகுதியில் 32 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
விசாரணையின்போது, மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவர் WhatsApp மூலம் தன்னைத் தொடர்புகொண்டு போதைப்பொருள் பொதியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக சந்தேகநபர் தெரிவித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதனையடுத்து பொரளை, வனாத்த வீதியில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, சிறைச்சாலை விளையாட்டு சீருடையில் பொதியைப் பெற்றுக்கொள்ள வந்ததாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டார். அவர் மெகசின் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக்காவலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



.jpg)






.jpg)

