காலி பகுதியில் நேற்று (22) நடைபெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் வழக்குகளை விரைவுப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்கும் விசேட கவனம் செலுத்தப்படுகிறது.
வளமான நாடு –அழகான வாழ்க்கை என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று ஜனாதிபதியினதும், 159 ஆளும் தரப்பின் உறுப்பினர்களினதும் வாழ்க்கை தான் வளமாகியுள்ளது. அழகாகியுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கை ஏழ்மை நிலைக்குத் தள்ளியுள்ளது.
திறைச்சேரி நிரம்பி வழிகிறது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் வறுமையில் நிரம்பியுள்ளது. திறைசேரியை நிரப்பி சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறாது. ஆகவே மக்களுக்கு அந்த நிதியில் நிவாரணமளிக்க வேண்டும்.
மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேரதல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது அரசாங்கத்தின் பிரச்சினையல்ல, தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவது உறுதி என்பதே அரசாங்கத்தின் பிரச்சினையாகும்.எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம் என நாமல் ராஜபக்ஷஷ குறிப்பிட்டார்.





.jpg)
.jpg)
.jpg)



.jpg)
