.jpg)
அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபிக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரணையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) நடைபெற்ற அமர்வின்போது குறித்த தனிநபர் பிரேரணையை முன்வைத்தார்.
அந்த தனிநபர் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வட மாகாணம், கிழக்கு மாகாணம், மொனராகலை மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்டம் போன்ற பின்தங்கிய பிராந்தியங்கள் நீடித்து நிலவிய சிவில் முரண்பாடுகளின் தாக்கங்களாலும் வரலாற்று ரீதியான புறக்கணிப்புக்களாலும் தொடர்ந்தும் பல தசாப்தங்களாக கடுமையான பொருளாதார இழப்புக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் இப்பின்தங்கிய பிராந்தியங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது பாரபட்சமான சுமைகள் திணிக்கப்பட்டுள்ளதால் இந்த 25 ஏற்றத்தாழ்வுகள் மேலும் உக்கிரமடைந்துள்ளது.
பொருளாதார ரீதியில் பின்னடைந்த இந்தப் பிரதேசங்களில் ஒப்புரவுமிக்க வளர்ச்சியையும், நிலைபெறுதகு அபிவிருத்தியையும் பால்நிலை வலுவூட்டலையும் மேம்படுத்தும் குறிக்கோளுடன் இக்கரிசனைக்குரிய விடயங்களை நிவர்த்தி செய்வதற்கென தனியானதொரு தேசிய முன்னெடுப்பினைத் தாபிப்பது அவசியமாக காணப்படுகிறது.
250 மில்லியன் டொலர் தொகையினை இலக்காகக் 10+2 மூலம் ஆண்டு காலப்பகுதியிலான நிகழ்ச்சித்திட்டத்தைக் கொண்டு அரசாங்கத்திடமிருந்தும் இருதரப்பு மற்றும் பல்தரப்புப் பங்காளர்களிடமிருந்தும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தும் மனிதாபிமானக் கொடையாளர்களிடமிருந்தும் கிடைக்கின்ற பங்களிப்புகளைத் திரட்டுவதற்கு ஒரு தேசிய அபிவிருத்தி நிதியத்தைத் தாபிக்க வேண்டும்.
அந்த நிதியினை விவசாயம், மீன்பிடி, மற்றும் குடிசைக் கைத்தொழில் என்பவற்றின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தைப் புத்துயிர்ப்பிப்பதற்கும்
தொழில் வாய்ப்பையும் மற்றும் பெண்களின் சமூகப்-பொருளாதார ஊக்குவிப்பையும் மேம்படுத்துவதற்காக உட்கட்டமைப்பு வசதியை அபிவிருத்தி செய்வதற்கும், முடங்கிக் கிடக்கும் சொத்துக்களைசெயலூக்கப்படுத்தி அவற்றை மீளப்பயன்படுத்துவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றுக்கு உதவுவதற்கும்
மீள்புதுப்பிக்கத்தகு சக்தியிலும் மற்றும் ஏனைய வணிக ரீதியில் சாத்தியமான கூட்டுத் தொழில் முயற்சிகளிலும் முதலிடுவதற்கும் திறன் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் மற்றும் இளைஞர் யுவதிகளுக்குக் கல்வி கற்பிக்கப் பயன்படுத்தவும் உள்ளூர் திறனாற்றலை கட்டியெழுப்புவதற்காக முதலீடுகளிலுள்ள சாத்தியமான இடைவெளிகளை ஒழித்தல், நிதிகளின் பயனுள்ள மற்றும் வெளிப்படைத் தன்மைமிக்க பயன்பாடு ஆகியவற்றினை உறுதிப்படுத்தி,தொழில்நுட்ப உதவி வசதியைத் தாபிக்க உதவுவதற்கும்,
பொருளாதாரச் செயற்பாடுகளிலும் தீர்மானமெடுத்தல் விடயங்களிலும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு அளவிடக்கூடிய இலக்குகளைக் கொண்டு சகல முதலீட்டுத் துறைகளிலும் பால்நிலையின் உள்ளடக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கும்,
இலங்கையின் பிரத்தியேகமான அபிவிருத்தி, நல்லிணக்கம், நிலைபெறுதகு அபிவிருத்தி என்பவற்றுக்கான ஒரு அவசர தேசிய நடவடிக்கையாக அந்த நிதியம் தாபிக்கப்படுவதைக் கருத்திற்கொள்வதன் மூலம் கருத்திட்டச் செயற்படுத்துகையில் ஒப்புரவுமிக்க பிராந்திய உள்ளடக்கம், வகைப்பொறுப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நிதியத்தை ஒருங்கிணைக்கக்கூடிய விதத்தில் அந்தந்த அமைச்சுக்களுக்கும் மாகாண சபைகளுக்கும் உள்ளூர் அதிகாரசபைகளுக்கும் அதிகாரமளிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





.jpg)





.jpg)

