மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கெப் வாகனத்துடன் மோதியதைத் தொடர்ந்து, பின்னால் வந்த வாகனங்களும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பேருந்துகள், ஆறு கார்கள் உள்ளிட்ட மேலும் பல வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தைத் தொடர்ந்து காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களை தொடங்கொட வெளியேறும் வழியாக பொலிஸார் திருப்பிவிட்டுள்ளனர்.





.jpg)



.jpg)
.jpg)


.jpg)