
சமூக ஊடகங்களில் பரவி வரும் 11 வயது சிறுவன் போதைப்பொருள் பயன்படுத்துவதாகக் காட்டப்படும் காணொளி தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த விசாரணையை முன்னெடுத்துள்ளது.
பொலிஸ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரியின் அறிவுறுத்தலின் பேரில், தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிமாலி பொன்சேகா மற்றும் பொலிஸ் பரிசோதகர் கண்டீபன் தலைமையிலான அதிகாரிகள், செப்டம்பர் 18ஆம் திகதி கணேமுல்ல, சுமேத மாவத்தையில் உள்ள வீடொன்றில் சிறுவனை கண்டுபிடித்தனர்.
பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாகக் கூறப்படும் சிறுவன், பொலிஸாரால் பாதுகாப்பு நடவடிக்கையாக பொறுப்பேற்கப்பட்டார்.
பின்னர் சிறுவனும் அவரது தாயாரும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறுவனின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.





.jpg)



.jpg)


.jpg)