காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்படும் இந்த கொடிய பொறிகளால் யானைகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த கொடிய வெடிபொருள் வாய்க்குள் வெடிப்பதனால் யானைகளின் தாடை மற்றும் வாய்ப் பகுதிகள் கடுமையாகச் சிதைந்துபோகின்றன.
இதனால் ஏற்படும் கடுமையான வலி, காயம் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக விலங்குகளால் உணவோ நீரினையோ அருந்த முடியாமல் மெல்ல மெல்ல உயிரிழக்கின்றன என சிரேஷ்ட கால்நடை வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண வனவிலங்கு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.ஜி. விக்ரமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், மகாஓயா வனஜீவிகள் யானை கட்டுப்பாட்டுப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.








.jpg)



.jpg)