எழுத்து பரீட்சையில் தோற்றிய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில் இந்தச் செய்முறைப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதேபோன்று, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் விண்ணப்பப் படிவங்களில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்குப் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மேலும், பரீட்சார்த்திகளின் வசதிக்காக, செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு 7 நாட்களுக்கு முன்னர் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) இருந்து தங்களது அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.





.jpg)



.jpg)
.jpg)

.jpg)
