22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளப்பெறுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று வியாழக்கிழமை (24) பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
பத்தரமுல்லை, பொல்துவ சந்திக்கு அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாது பெருமளவானோர் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அதனை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பான பாராளுமன்ற விவாதம் நாளை வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது.
குறித்த திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என்றும், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





.jpg)




.jpg)


