.jpg)
நாட்டில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நாடு தழுவிய ரீதியில் விசேட அதிரடி சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடி சோதனையில் 27,696 நபர்கள் அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், 455 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 492 பேர் பிடிபட்டதோடு மதுபோதையில் வாகனம் செலுத்திய 220 சாரதிகள் , அலட்சியமாக வாகனம் செலுத்திய 104 பேர் கைது செய்யப்பட்டதோடு மேலும் 4,371 ஏனைய போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த விசேட சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.




.jpg)



.jpg)
.jpg)
.jpg)

