ஹொரகொல்ல தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹொரகொல்ல தேசிய பூங்கா அதிகாரிகள் மற்றும் மேல் மாகாண உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு யானை முத்துக்களும் இதன்போது மீட்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹிங்குரக்கொட, தொடந்துவ மற்றும் ஹிக்கடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட யானை முத்துக்களையும் எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், யானைகள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பாலூட்டிகளின் உடற்பாகங்களை வைத்திருத்தல், காட்சிப்படுத்துதல், எடுத்துச் செல்லுதல் அல்லது விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த யானை முத்துக்கள் சந்தேகநபர்களுக்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.











.jpg)
.jpg)