
நுகர்வோர் முறைப்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தேவையான இறக்குமதியாளர் தகவல்கள் இல்லாமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான டயப்பர்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்த 5 வர்த்தக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1,40,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான சில டயப்பர்கள் பயன்படுத்தும்போது சிதைந்து கிழிவதாகக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) விசாரணைகளையும் சோதனைகளையும் மேற்கொண்டது.
இதன்போது, டயப்பர்களில் இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் அல்லது இணையத்தளத் தகவல்கள் குறிப்பிடப்படாமல் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையில், குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட 5 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், வழக்குப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்ட குறைந்தது 87 பொதிகள் டயப்பர்களையும் அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைப்பாடுகளுக்கு CAA அவசர தொலைபேசி இலக்கம்: 1977









.jpg)

.jpg)