வாகனேரியில் யானை தாக்கி 60 வயதுடைய நபர் உயிரிழப்பு


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் வைத்து யானை தாக்கியதில் நபரொருவர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (21) திங்கட்கிழமை காலை வாகனேரி குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

யானை தாக்கிய சம்பவத்தில் வாகனேரி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஜீ. மனோகரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.