மின்னணு வாகன வருமான அனுமதிப்பத்திர முறையின் முக்கிய உட்கட்டமைப்பு மேம்படுத்தல் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கணினி கட்டமைப்பின் மேம்படுத்தல் பணிகள் செப்டெம்பர் 28 ஆம் திகதி நிறைவடைந்த பின்னர், பாதிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களிலும் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள வாகன உரிமையாளர்கள் இந்தக் காலப்பகுதியைக் கருத்திற்கொண்டு தங்களது வாகன வருமான அனுமதிப்பத்திர புதுப்பித்தல் நடவடிக்கைகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





.jpg)



.jpg)



.jpg)