இலவச சுகாதார சேவைக்கு நிதி திரட்ட புதிய ‘Ayubo’ லொத்தர் அறிமுகம்


இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்காக நேரடியாக நிதி திரட்டும் நோக்கில் புதிய தினசரி லொத்தர் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“Ayubo” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த லொத்தர், தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியம் (NHDF), சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியவற்றினால் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த லொத்தர் மூலம் கிடைக்கும் நிதி, சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதார அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

‘Ayubo’ லொத்தரின் முதலாவது சீட்டிழுப்பு விசேட சீட்டிழுப்பாக 2026 ஒக்டோபர் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த லொத்தர் சீட்டை கொள்வனவு செய்வதன் மூலம் பரிசு வெல்லும் வாய்ப்பைப் பெறுவதுடன், நாட்டின் சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்கும் நேரடியாகப் பங்களிக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிமுக நிகழ்வின்போது நோயாளர் கண்காணிப்பு கருவி (Patient Monitor) ஒன்றும் அடையாளபூர்வமாக நன்கொடையாக வழங்கப்பட்டது.