வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயம் நூற்றாண்டைக் கொண்டாடும் முகமாக நினைவுத் தூபிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

(சித்தா)

வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயமானது எதிர்வரும் மே, 2027 இல் தனது நூற்றாண்டு தினத்தினை கோலாகரமான முறையில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பா.வரதராஜன் தெரிவித்தார்.

இந்த வகையில் இப்பாடசாலையில் கற்று வெளியேறிய பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகத்தினர் அதற்கான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் 03.09.2026 ஆம் திகதி நூற்றாண்டு விழாவினை நினைவுகூறும் வகையில் அமைக்கப்படவுள்ள நினைவுத் தூபிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந் நிகழ்வானது 2002 ஆண்டு க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி பயின்ற மாணவர்களின் இணைப்பாளர் அ.டிமலராஜ் தலைமையில் நடைபெற்றது. இதனை சிறப்பிக்கும் முகமாக பாடசாலையின் அதிபர் அ.ஜெயப்பிரதாபன், வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிருவாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், சமூக நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டு இந் நிகழ்வினைச் சிறப்பித்தனர்.