
வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு, உருச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும். எதிர்காலத்தில் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க அரசாங்கம் அனுமதியளிக்குமா என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை (19) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகள் தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.பௌத்த சின்னங்களும், மரபுரிமைகளும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.
வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு, உருச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும்.எதிர்காலத்தில் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க அரசாங்கம் அனுமதியளிக்குமா என்று கேட்கிறோம்.
திலீபனின் உருவச்சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீறுடையுடன் பங்குப்பற்றியுள்ளார்கள். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை ஏற்றுக் கொள்வாரா, பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக பிரிவினைவாதம் விதைக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியில் பிரபல்யமடைய வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பாதுகாப்பு சார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்துகிறது.
நல்லாட்சி அரசாங்கமும் இவ்வாறே செயற்பட்டது. இறுதியில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது.ஆகவே அரசியல் வெற்றிக்காக பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.





.jpg)



.jpg)

.jpg)
