.jpg)
வவுனியாவில் சுமார் 5 கிலோகிராம் எடையுள்ள திமிங்கல வாந்தியை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, வவுனியா முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, சட்டவிரோதமான முறையில் 5 கிலோகிராம் திமிங்கல வாந்தியை கைவசம் வைத்திருந்த நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த அம்பர்கிரிஸும் கைப்பற்றப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்ட நபர் அநுராதபுரப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட திமிங்கல வாந்தியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)



.jpg)
.jpg)
.jpg)

