இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் இல்லை இருந்தபோதிலும் நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலையும் காற்றுச் சுழற்சியும் தொடரக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வங்காள விரிகுடாவின் வடமேற்குத் திசையில் சக்தி வாய்ந்த தாழ் அமுக்கம் காணப்படுவதனால் இக் கடல் பிராந்தியத்தில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்வதுடன் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 - 80 km வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும். இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகையினால் இக் கடல் பிராந்தியத்திற்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
இதன் தாக்கத்தின் காரணமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும். ஆகையினால் இக் மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.





.jpg)



.jpg)



.jpg)