சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் கசிப்பு, கோடா, உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மராவாலா பகுதியில் திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 67 லீற்றர் 500 மில்லிலீற்றர் கசிப்பை (90 போத்தல்கள்) வைத்திருந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இன்னிகொடவெல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 120 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 800 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கசிப்பு 160 போத்தல்களில் 120 லீற்றராக இருந்ததுடன், கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 800 லீற்றர் கோடா நான்கு பேரல்களில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்னிகொடவெல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹலாவத்தை கரவிட்டாகர பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 61 லீற்றர் 500 மில்லிலீற்றர் கசிப்பு (82 போத்தல்கள்), 1,653 லீற்றர் 1653 மில்லிலீற்றர் கோடா (8 பேரல்கள்) மற்றும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


.jpg)


.jpg)



.jpg)
.jpg)

.jpg)
