ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கைது செய்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தைக் குழப்பும் நோக்கிலேயே இந்தக் கைது இடம்பெற்றதாக செப்டெம்பர் 4ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு உள்ள அதே ஜனநாயக உரிமை நாமல் ராஜபக்ஷவுக்கும் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அந்த உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகளை ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளதைக் காட்டுவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
“அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் மக்கள் ஆதரவைக் கைது நடவடிக்கைகள் மூலம் இல்லாமல் செய்ய முடியாது” எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக அரசியல் செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4




.jpg)






.jpg)

