இலங்கை விமானப்படையின் நிர்வாகத்தின் கீழும், திறைசேரியின் 100 சதவீத பங்குரிமையுடனும் இயங்கும் வகையில் இந்த புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மற்றும் சுகாதாரம், வெகுசன ஊடக அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
வைத்தியசாலையின் உரித்து 100 சதவீத பங்குரிமையுடன் திறைசேரியின் கீழ் இயங்கும் நிறுவனத்திற்குப் மாற்றப்படுவதுடன், அதன் முகாமைத்துவப் பணிகளை இலங்கை விமானப்படை மேற்கொள்ளும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பரிந்துரைக்கமைய, திறைசேரி செயலாளரால் 11 உறுப்பினர்களைக் கொண்ட பணிப்பாளர் சபை நியமிக்கப்படும்.
2026 – 2028 காலப்பகுதியில் ஊழியர்களின் சம்பளம் மற்றும் செயல்பாட்டுச் செலவுகளை திறைசேரி வழங்கும். அதன் பின்னர் வை்ததியசாலை சுயநிதி நிறுவனமாக இயங்கும். பொதுமக்களுக்கான இலவச சிகிச்சைகளுக்காக, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுதோறும் 125 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மருத்துவமனைக்கு வழங்கப்படும்.
பொதுமக்களுக்கு இலவசமாகவும், கட்டண அடிப்படையிலும் இங்கு சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





.jpg)



.jpg)
.jpg)
.jpg)

