.jpg)
அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவூதி அரேபிய அரசை நாடி, கோரிக்கை விடுத்ததன் பின்னரே, இவ்விவகாரத்தில் இந்திய அரசு அதன் முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக்கூட்டணியின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை (23) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள், அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிப் பங்களிப்பைக் கோரினர்.
அத்தோடு இலங்கை அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு அனோஜன் விவகாரத்துக்கு ஒட்டுமொத்த இலங்கையர்கள் சார்பில் தீர்வு தேடவே தமிழ் முற்போக்குக் கூட்டணி விரும்புகிறது என இதன்போது மனோகணேசன் இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது இந்தியப் பிரதமருக்கான எழுத்துமூல மகஜரொன்றும் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




.jpg)




.jpg)


