புதிய அறிவுறுத்தலின்படி, பாடசாலையின் பெயர் அல்லது இலச்சினையைப் பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் பாடசாலை நிகழ்வுகளாகவே கருதப்பட்டு, குறித்த தடை அமுல்படுத்தப்படும்.
கல்வி அமைச்சின் 2026/10ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைய, இந்த அறிவுறுத்தலை மீறும் நிகழ்வுகளை உடனடியாகத் தடைசெய்யும் அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையிலான முக்கிய கிரிக்கெட் போட்டிகளின்போது மாணவர்கள் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கு ஆளாக்கப்படுவதாகப் பெற்றோரிடமிருந்து தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது அதன் இலச்சினையைப் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை ஊக்குவிக்க முடியாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முக்கிய பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் இந்தத் தடை கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






.jpg)



.jpg)
.jpg)

