மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் படகு கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு


மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம்  பகுதியில் கடலில் படகு ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரில் ஒருவரின் சடலம் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், நீரில் மூழ்கிக் காணாமல் போன மற்றொருவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விபத்து நடந்த உடனேயே அருகில் இருந்தவர்களால் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ள நபரின் உடலைக் கண்டெடுப்பதற்காக உயிர்காப்பு பிரிவினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.