மண்டூர் மெதடிஸ்த திருச்சபையில் 'மலரும் மொட்டுக்கள்' சிறுவர் அபிவிருத்தி திட்டம்.

(சித்தா)
மலரும் மொட்டுக்கள் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மெதடிஸ்த திருச்சபை மண்டூரில் 2026 / 2027  ஆம் ஆண்டிற்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது ( skill development programme) செப்டம்பர் 2ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் மண்டூர் மலரும் மொட்டுக்கள் சிறுவர் அபிவிருத்தி  நிலையத்தில் திட்டத்தின் இயக்குனர் அருள்பணி டானியேல் அருள்ராஜ் தலைமையில் மற்றும் முகாமையாளர் இ. உதயதாஸ்  அவர்களின் வழிகாட்டலின் கீழ் சிறப்பாக நடைபெற்றது. இந்த திட்டத்தில் 255  பிள்ளைகள் பங்காளிகளாக உள்ளார்கள். இந்த பிள்ளைகளின் உயர்விற்காக இந்த திட்டம் கல்வி, சமூக, சரீர தேவையின் அடிப்படையில் சேவையாற்றுகின்றது. இதில் மண்டூர், தம்பலவத்தை, கனேசபுரம், வேத்துச்சேனை, மருங்கையடிப்பூவல், ஒல்லிமடு, புட்டியடித்துறை போன்ற பல கிராமப் புறங்களில் இருந்து பல  குடும்பங்களைச் சேர்ந்த  மாணவர்கள் இந்த திட்டத்தினால் நன்மையடைகின்றனனர் என்பது விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமாக மாணவர்களுக்குள் காணப்படும் விஷேட திறமைகளை இனங்கண்டு,  நெறிப்படுத்தி  அவர்களை உயர்வான இடத்திற்கு கொண்டு  போவதாகும். இந்த நிகழ்ச்சி  சிறப்பாக நடைபெறுவதற்கு வளவாளர்காக  பட்டிருப்பு கல்விவலய முன்னாள் ஆரம்பக் கல்வித்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன்,  பட்டிருப்பு கல்விவலய முன்னாள் அழகியற் துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் க.சுந்தரலிங்கம் மற்றும்  நாடகமும் அரங்கியலும் பயிற்றுனர் சிவமதி சயனொளி ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான பல பயிற்சிகளை வழங்கியோடு  சான்றிதழ்களும் அளிக்கப்பட்டது.