மட்டக்குளியில் கோர விபத்து : இருவர் உயிரிழப்பு ; நால்வர் படுகாயம்


கொழும்பு, மட்டக்குளி பகுதியில் புதன்கிழமை (16) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கார் ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கார் மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஆறு பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் நால்வர் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.