புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது


புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திகம பகுதிகளைச் சேர்ந்த 19, 26, 45, 47 மற்றும் 49 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹிங்குராக்கொட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.