அதிவேக வீதியில் பயணிக்கும் அனைவருக்கும் ஆசனப் பட்டி கட்டாயம்



அதிவேகப் வீதியில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசன பட்டி அணிவது இன்று சனிக்கிழமை (19) நள்ளிரவு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிவேகப் வீதியில் பயணிகள் அனைவரும் ஆசன பட்டி அணிய வேண்டும் என்ற விதிமுறைகள் கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில வாகனங்களின் பின் இருக்கைகளில் ஆசன பட்டிகள் இல்லாததால் அதன் அமலாக்கம் தாமதமானது.

அதன்படி, பின் இருக்கைகளில் ஆசன பட்டிகளைப் பொறுத்துவதற்கு வழங்கப்பட்ட ஒரு வருட அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதிவேகப் வீதிகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசன பட்டி அணிய வேண்டும் என்ற விதிமுறை வெள்ளிக்கிழமை (18) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.