கிண்ணியாவில் வறட்சி காரணமாக பல பகுதிகள் பாதிப்பு



கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட பல பகுதிகள் வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் விவசாயம்,பயிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

சுமார் 850 மேற்பட்ட விவசாயம், கால்நடை வளர்ப்பு, மரக்கறிப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் குடும்பங்கள் வாழ்கின்றனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சூரங்கல், மகாமார், நடுவூற்று முதலான கிராமங்களிலுள்ள கிணறுகளிளேயே இவ்வாறு நீர் வற்றிக் காணப்படுகின்றன.

கிணற்றில் உள்ள நீர் வற்றிக் காணப்படுவதனால் அன்றாடத் தேவைகளான குடிப்பதற்கு, குளிப்பதற்கு நீரின்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

கிணற்றுநீரை நம்பி மேட்டுநிலப் பயிர்களான மிளகாய், கத்தரி, வெண்டி, பீர்க்கங்காய் முதலான பயிர்கள் நீரின்றி அழிவடைந்துள்ளதோடு, அவற்றினூடாகப் கிடைக்கும் பயன்களும் குறைவடைந்துள்ளதாக பயிர்ச்செய்கையாளர்கள் கூறுகின்றனர்.

இங்கு பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் வறட்சி காரணமாக மஞ்சள் நிறமாகவும், கருகிய நிலையிலும் காணப்படுவதோடு அவற்றைப் பயன்படுத்த முடியாதுள்ளதாகவும் கூறுகின்றனர்.

அத்தோடு கால்நடைகளும் நீரின்றி பெரும்சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. வீடுகளில் உள்ள கிணறுகளில் நீர் வற்றி காணப்படுவதனால் ஆடு, மாடு முதலான கால்நடைகளுக்கு நீர் கொடுப்பதிலும் பிரச்சினையை எதிர்நோக்குவாதாகத் தெரிவிக்கின்றனர்.

கால்நடைகளுக்கு தீனியாக வழங்கப்படுகின்ற புற்கள் கூட கருகி காணப்படுவதனாலும் தொடர்ந்து வறட்சி நீடித்தால் இதுபோன்று பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.