
(சித்தா)
2026 ஆம் கல்வியாண்டுக்கான க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த. சாதாரண பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப (ICT) பாடத்தில் தோற்றவிருக்கும் பட்டிருப்பு வலயத்தின் போரதீவுக் கோட்ட மாணவர்களின் நலன் கருதி இலவசமான கருத்தரங்கை தொழிநுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் கடமை புரியும் திருமதி றூபினி D.M. டேவிட் அவர்களால் இன்று 18.09.2026 (வெள்ளிக்கிழமை) தகவல் தொழிநுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் (Information Technology and Distance Learning Hub) நடைபெற்றது. இதில் போரதீவுக் கோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றினர். க.பொ.த.சாதாரண கலைத்திட்டத்தில் 2006 இல் தொடர்பாடல் தொழினுட்ப (ICT) பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு 2007 இல் முதலாவது ICT பரீட்சை நடைபெற்றது. அன்று முதல் இன்றுவரை வினாத்தாள் மதிப்பிட்டுப்பணியில் தொடர்ந்து ஈடுபடும் அனுபவமும், உயர்கல்வியறிவும் மிக்க இவரது சேவை தமது போரதீவுக் கோட்ட மாணவர்களுக்கு கிடைத்தமையையிட்டு போரதீவுக் கோட்ட சமூகம் மிக மகிழ்ச்சியடைகின்றது. இவ்வலயத்தில் நிரந்தர ICT சேவைக்கால ஆலோசகர் இல்லாத பட்சத்திலும் கூட கடந்த வருடங்களாக இம் மாணவர்களின் நலன்கருதி சேவை நோக்கோடு இவரின் இச் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படுகின்றமையையிட்டு கல்விச் சமூகம் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.








.jpg)



.jpg)