
2026 ஆம் ஆண்டில் அநுராதபுரம் மாவட்டத்தில் 1000 வீடுகளை அமைத்து பயனாளிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தினை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதாக வீடமைப்பு அதிகாரசபையின் அநுராதபுரம் மாவட்ட முகாமையாளர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.
மேற்படி வேலைத்திட்டம் அநுராதபுரம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் பிரிவினை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதில் 820 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த 150 வீடுகள் உலக வீடமைப்பு தினமான 05 ஆம் திகதி திங்கட்கிழமை அநுராதபுரம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகள் இல்லாத பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
அநுராதபுரம் மாவட்டத்திலேயே இவ்வருடம் அதிகளவான வீடுகள் வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட முகாமையாளர் அஜித் பிரசன்ன மேலும் தெரிவித்தார்.











.jpg)
