.jpg)
அம்பலாந்தோட்டை பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு முற்பட்ட 1,042 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரும் ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரும் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (16) மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போதே இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் 'SLNS காவந்திஸ்ஸ' கடற்படை முகாம் சிப்பாய்களும், ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரும் இணைந்து அம்பலாந்தோட்டை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை நிறுத்தி சோதனையிட்டபோதே, அவரிடமிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 1,042 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







.jpg)




