
வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமுலன பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பான 12 ரக துப்பாக்கியொன்றைக் கைவசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர் தங்கல்ல பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (12 ) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் மெதமுலன, வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று செவ்வாய்க்கிழமை (13) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, தலா 3 இலட்சம் ரூபா வீதமான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4






.jpeg)





