பண்டாரவளையில் தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – 17 வயது இளைஞர் உயிரிழப்பு



பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை – வெலிமடை பிரதான வீதியின் 05 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் திங்கட்கிழமை(05) இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளையிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, அதற்கு எதிர்திசையில் வந்த தனியார் பேருந்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டுப் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கொஸ்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.