கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி – ஓராண்டுக்குப் பின் 20,000 புள்ளிகளுக்குக் கீழ் சரிவு !



கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) 281.42 புள்ளிகளால் சரிவடைந்து, நாளாந்த வர்த்தக முடிவில் 19,796.06 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்குப் பிறகு முதல்முறையாக அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 20,000 புள்ளிகள் எல்லைக்குக் கீழ் சரிந்துள்ளது.

இன்றைய மொத்தச் சந்தை புரள்வு 1.92 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.