நல்லூரில் காதலி மற்றும் அவரது தாய் மீது கூரிய ஆயுதத் தாக்குதல் – 32 வயது பெண் உயிரிழப்பு; சந்தேகநபரும் உயிர்மாய்ப்பு



யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் நல்லூர் பகுதியில், இரண்டு பெண்கள் மீது கூர்மையான ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த ஒரு பெண், யாழ்ப்பாண மருத்துவமனையில் திங்கட்கிழமை (5) அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.

வாக்குவாதம் முற்றிப்போனதைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் காதலன் குறித்த பெண்ணையும் அவளது தாயையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தினையடுத்து, சந்தேக நபர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் முன்பாக குதித்து உயிர்மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் 38 வயதுடைய நல்லூரைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.