
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்து முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பித்தற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற செயற்குழுவின் செயற்பாட்டுக்காலம் 2026.12.21ஆம் திகதி வரை நீட்டிக்கப்படவுள்ளது.
செயற்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை நீட்டிப்பதற்கான பிரேரணையை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று செவ்வாய்க்கிழமை (20) பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்து முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பித்தற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற செயற்குழுவானது தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை,
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட குழுவுக்கு வழங்கப்பட்ட காலத்தை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை நீட்டிப்பதற்கு பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.










.jpg)

