
2026 ஒக்டோபர் 20ஆம் திகதிய சபாநாயகரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட முப்பது மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், 2026 ஒக்டோபர் 07, 08 மற்றும் 20 ஆம் திகதிய அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட 25 மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம், “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் 11 மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்












