ராகமையில் 375 லீற்றர் கசிப்புடன் 39 வயது நபர் கைது



ராகமை பொலிஸ் பிரிவின் பொடிவிகும்புர பகுதியில் வலனா மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்திய அதிரடி சோதனையில் 375 லிற்றர் கசிப்புடன் சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையில் 375 லிற்றர்( 500 போத்தல்) கசிப்பு வலனா மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய ராகமவைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ராகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.