
சிறந்த தரமான நீர் சேவையை வழங்குவதற்காக ஹரிஸ்பத்து பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கண்டியின் சில பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
குறித்த நீர் விநியோகம் நாளை புதன்கிழமை (21) 09.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் 3.00 மணி வரை 42 மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.
தற்காலிகமாக நீர் விநியோகம், மெதவெல (பழைய) சேவை நீர்த்தேக்கம் - கெவும்கொஹே வீதி, கோனி கொட, ஜயந்தி வீதி, குருகேவே, பல்கும்புர, இடமேகம, ஆரம்பேகம, கோரொக்கஸ் அங்க வீதி, எலமல்பாத, கொடு தென்னன, பெத்தியகொடவத்தை, களுவானை, போதொட்ட, கும்பரஹ தென்னன திப்புத்த, தல பெலல்லகொட வீதி மெதவெல (புதிய) சேவை நீர்த்தேக்கம் படுகொட, எஹே அலகசின்ன, தித்தெனிய, ஒவிசா, வடகொட, தொம்பகம்மன, ஹதெனிய. சூரியகும்புர, அம்பருப்ப, ஹரன்காவ, பொக்காவல, வலதென்ன, பத்திரதா கல்லென தோட்டம் - கல்லெனவத்தை, பார்ன் அங்க கலகெதர - கலகெதர, வெமட, போயகொட சுற்றியுள்ள பகுதிகள், ரம்புக்கன வீதி, பொஹோலியத்த வீதி, குருநாகல் வீதி மாவத்தகம - மாவத்தகம, பரந்தன் வீதி, ரம்புக்கன வீதி, பரகஹதெனிய, யடிவில, மில்லவ, பிலஸ்ஸ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்வுள்ள சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவிப்பதோடு, சேகரிக்கப்பட்ட நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.










.jpg)

