அநுராதபுரத்தில் காணித் தகராறால் 51 வயது குடும்பஸ்தர் வெட்டிக் கொ லை – பெண் உட்பட 7 பேர் கைது



அநுராதபுரம் இராஜாங்கனை பகுதியில் காணித் தகராறினால் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜங்கனை பொலிஸ் பிரிவின் யாயா 15 பகுதியில் நேற்று (07) புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜாங்கனை சாலியபுர பகுதியை வசிப்பிடமாக கொண்ட 51 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே வெட்டிக்க் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்தவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மிக நீண்ட நாட்களாக வயல் காணி தொடர்பாக ஏற்பட்டு வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது பொலிஸ் விசாரணைகளில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பாக 20 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆறு சந்தேக நபர்களும், ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் இராஜங்கனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.